எழுத்தின் அளவு: அ+ அ- அ
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.
டெல்லியில் இன்று நடைபெறும் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற மும்முனை போட்டி நிலவுகிறது. மொத்தமுள்ள 70 தொகுதிகளிலும் 699 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒரு கோடியே 55 லட்சத்து 37 ஆயிரத்து 634 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறு, விறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடி மையங்களில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். பிற்பகல் 3மணி நிலவரப்படி 46.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வரும் 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. டெல்லியில் 3வது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் ஆம் ஆத்மி கட்சியும், 27 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியைப் பிடிக்கும் உறுதியுடன் பா.ஜ.கவும் களம்கண்டுள்ளது. அதேநேரம் இருகட்சிகளையும் எதிர்த்து காங்கிரஸ் கட்சியும் களமிறங்கி உள்ளதால் டெல்லி சட்டப்பேரவை தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.