டெல்லி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் ஷூ தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. 

டெல்லி நங்லாய் - நஜாஃப்கர் சாலையில் உள்ள ஷூ தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், ஏராளமான காலணிகள், ஷுக்‍கள் கொழுந்து விட்டு எரிந்தன. தகவலறிந்து 30க்‍கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் 5 மணி நேரத்துக்‍கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். நேற்று விடுமுறை நாள் என்பதால் தொழிலாளர்கள் யாரும் இல்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

Night
Day