டெல்லி நோக்கி விவசாயிகள் போராட்டம் - பஞ்சாப்பில் உஷார்நிலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்றம் நோக்கி விவசாயிகள் இன்று பேரணி நடத்தவுள்ளதால் டெல்லிக்கு செல்லும் சாலைகளில் போலீஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

புதிய வேளாண் சட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு மற்றும் சலுகைகள் வழங்க வேண்டும், நிலமற்ற விவசாயிகளுக்கு வேலை வாய்ப்பு மற்றும் மறுவாழ்வு பலன்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லிக்கு செல்வோம் என்ற பேரணியை பஞ்சாப் விவசாயிகள் முன்னெடுத்துள்ளனர். இவர்கள் டிராக்டர்கள் மூலம் டெல்லி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதால், அவர்களை டெல்லியில் நுழையாமல் தடுப்பதற்காக பஞ்சாப் - ஹரியானா இடையே அமைந்திருக்கும் ஷம்பு எல்லையில் கான்க்ரீட் தடுப்புகளை வைத்து போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Night
Day