டெல்லி - பாஜக தொண்டா்கள் வெற்றி கொண்டாட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு அரியணையில் ஏற உள்ளதால் நாடு முழுவதும் அக்கட்சியினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லி சட்டமன்ற தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்ற நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. தொடக்கம் முதலே பாஜக, ஆம் ஆத்மி கட்சி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பெரும்பான்மைக்கு தேவையான 36 இடங்களை விட அதிக இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. 40க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கும் நிலையில், ஆளும் ஆம் ஆத்மி கட்சி 20க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது. தலைநகரில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சி அமைக்க உள்ளதால், அக்கட்சியினர் மற்றும் தொண்டர்கள் அங்குள்ள பாஜக தலைமை அலுவலகம் முன் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்..

Night
Day