டேட்டிங் ஆப் மூலம் வரவழைக்கப்பட்ட இளைஞரிடம் ஒரு குளிர் பானத்துக்கு 16 ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டிய பெண்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் டேட்டிங் ஆப் மூலம் வரவழைக்கப்பட்ட இளைஞரிடம் ஒரு குளிர் பானத்துக்கு 16 ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


டேட்டிங் ஆப் மூலம் காஜியாபாத்தில் உள்ள கவ்ஷாம்பி மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அந்த இளைஞரை வரவழைத்த இளம் பெண், அருகிலுள்ள ஓட்டலுக்கு அழைத்து சென்றுள்ளார். அந்த இடம் சந்தேகத்துக்கு இடமாக இருந்ததால், தான் இருந்த இடத்தை நண்பருக்கு அந்த இளைஞர் பகிர்ந்துள்ளார். பின்னர் இந்த இடத்தை விட்டு செல்ல இளைஞர் முயன்ற போது, அந்த இளம் பெண் ஆர்டர் செய்த ஒரு குளிர்பானத்துக்கு 16 ஆயிரத்து 400 ரூபாய் பில் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்த இளைஞர் எதிர்ப்பு தெரிவிக்கவே 50 ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டு செல்லுமாறு அவர் மிரட்டப்பட்டுள்ளார். நிலைமைய உணர்ந்த இளைஞரின் நண்பர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் வந்ததை அடுத்து இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. மோசடியில் ஈடுபட்ட 5 பெண்கள், 3 ஆண்கள் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அந்த பெண்கள் டேட்டிங் ஆப் மூலம் ஆண்களை தொடர்பு கொண்டு ஓட்டலுக்கு வரவழைத்து, அவர்களை மிரட்டி உணவு மற்றும் குளிர் பானங்களுக்கு அதிக கட்டணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

Night
Day