தமிழகத்திற்கு 5.26 டிஎம்சி நீர் திறக்‍க காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்திற்கு 5.26 டிஎம்சி தண்ணீரை திறந்து விட காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 19ம் தேதி நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் டிசம்பர் மாதம் முழுவதும் 3 ஆயிரத்து 128 கன அடி நீர் திறக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரை வழங்கி இருந்தது. இதனை தொடர்ந்து வருடத்தின் முதல் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெற்றது. அதில், தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற கூட்டத்தில்,   ஜனவரி, பிப்ரவரி மாதத்திற்கு சேர்த்து காவிரியில் 5.26 டி.எம்.சி நீர் திறந்துவிட காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை வழங்கியுள்ளது. 

Night
Day