தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு கடத்தப்படும் கனிம வளங்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் போலீசார் உயர்புரங்கள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு லாரிகளில் கனிம வளங்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றன. இந்நிலையில், ஒரு சில லாரிகளில் போலி ரசீதுகளை காண்பித்து அளவுக்கு அதிகமாக கனிம வளங்கைள் ஏற்றிச் செல்வதாக வந்த புகாரையடுத்து, போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதற்காக தமிழக-கேரள எல்லை பகுதியான புளியரை வாகன சோதனை சாவடியில் உயர்கோபுரம் அமைத்து, தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் கனிம வள லாரிகளை கண்காணிக்கவும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கழிவு பொருட்களை ஏற்றி வரும் லாரிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

Night
Day