எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் மும்மொழி பாடத்திட்ட கொள்கையை அமல்படுத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாஜக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அனைத்து தரப்பு மாணவர்களின் பள்ளிக் கல்வி தரத்தை மேம்படுத்தவும், அனைத்து இந்திய மொழிகளையும் ஏழை, எளிய, பட்டியல், பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினை சார்ந்த பள்ளி குழந்தைகள் இலவசமாக கற்க வேண்டும் என்ற நோக்கத்தோடும் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மிகப்பெரிய கல்விக் கொள்கை திட்டம் எனக் கூறியுள்ளார்.
ஆனால் இந்தத் திட்டத்தை அரசியல் காரணங்களுக்காக தமிழகம், கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநில அரசுகள் இந்தி திணிப்பு என்ற பொய்யான காரணத்தைக் காட்டி ஏற்க மறுப்பதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார். இந்த திட்டத்தை ஏற்க மறுப்பதால் சம்பந்தப்பட்ட மாநில பள்ளிக் குழந்தைகளின் அடிப்படை உரிமையான இலவச கல்வியை மறுக்கும் செயல் என்றும் அதனால் உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு மூன்று மாநில அரசுகளும் மும்மொழி பாடத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார். இம்மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது