தமிழ்நாட்டின் சிறப்புமிக்க தூத்துக்குடி முத்துக்களை பில்கேட்சுக்கு பரிசளித்தார் பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மிதிவண்டி கூட ஓட்டத் தெரியாத பெண்கள் இன்று ட்ரோன்களை இயக்குவதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் சந்தித்துப் பேசினார். அப்போது, செயற்கை நுண்ணறிவு, கல்வி உள்ளிட்டவை குறித்து இருவரும் விவாதித்தனர். தொடர்ந்து பில்கேட்ஸ் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர் மோடி, இந்தியாவின் பெருமையை எடுத்து கூறினார். இந்தியாவில் மிதிவண்டி கூட ஓட்டத் தெரியாத பெண்கள் இன்று டிரோன்களை இயக்குவதாக பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். இந்தியாவில் அதிகமான பெண்கள் புதிய தொழில் நுட்பத்தை கடைபிடிக்க தயாராக உள்ளதாக கூறிய பிரதமர் மோடி, 'நமோ ட்ரோன் திதி' திட்டத்தை தொடங்கி, அதன் மூலம் மக்களிடம் தமிழில் உரையாற்றுவது மகிழ்சியாக உள்ளதாக கூறினார். 

இந்த சந்திப்பின்போது, தமிழகத்தின் தூத்துக்குடியில் கடல் பகுதியில் எடுத்த முத்து, மற்றும் டார்ஜீலிங், நீலகிரியில் உருவான டீத்தூளையும், களிமண்ணால் உருவான மண்குதிரைகளையும் பில்கேட்சுக்கு பரிசாக பிரமதர் மோடி வழங்கினார்.

Night
Day