தமிழ் உட்பட 9 மொழிகளில் அறிமுகமான கூகுளின் 'ஜெமினி' செயலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கூகுளின் செயற்கை நுண்ணறிவு செயலியான ஜெமினி, தமிழ் உள்ளிட்ட 9 மொழிகளில் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் புதிய செயற்கை நுண்ணறிவு செயலியான ஜெமினியை, ஆண்ட்ராய்ட் செல்போன்களில் உள்ள ப்ளே ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 9 மொழிகளில் பயன்படுத்திக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சம் ஆயிரத்து 500 பக்க ஆவணங்கள், 100 மின்னஞ்சல்களை பதிவேற்றம் செய்து பகுப்பாய்வு விவரங்களை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day