தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் பதவியேற்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவின் 26வது தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்.

தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகித்து வந்த ராஜீவ் குமாரின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் நடந்த தேர்வுக்குழு கூட்டத்தின் பரிந்துரையின்பேரில் அப்பதவிக்கு ஞானேஷ்குமார் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலைமை தேர்தல் ஆணையராக 2029ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி வரை பொறுப்பு வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு 370-ஐ நீக்கம் செய்வது தொடர்பான மசோதாவை வரைவு செய்ததிலும், அயோத்தி கோயில் தொடர்பான உச்சநீதிமன்ற வழக்குகளில் ஆவணங்களை கையாண்டதிலும் இவர் முக்கிய பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day