தவறான விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களும் குற்றவாளிகளே - உச்சநீதிமன்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை ஆதரிக்கும் பிரபலங்களும் தண்டனைக்கு உள்ளாவார்கள் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

பதஞ்சலியின் தவறான விளம்பரங்கள் குறித்து விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், தவறாக வழிநடத்தும் விளம்பரங்களில் நடிக்கும்போது பிரபலங்களும் குற்றவாளிகளாக கருதப்படுவர் எனவும், விளம்பரங்களை வெளியிடுவதற்கு முன்பாக இவை தவறான விளம்பரம் அல்ல என உறுதியளிக்க வேண்டும் எனவும் கூறியது. மேலும் நுகர்வோர் விளம்பரங்கள் குறித்து புகாரளிக்க நடைமுறை வகுக்க வேண்டும் எனவும், தவறான விளம்பரங்களை தடுப்பதற்கு மேற்கொண்ட நடிவடிக்கைகள் குறித்து விளக்குமாறு ஒளிபரப்பு அமைச்சகத்திடம் உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. 

Night
Day