எழுத்தின் அளவு: அ+ அ- அ
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக சர்வதேச அளவில் விசாரணை மேற்கொள்ளப்பட்டால் முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் சரிஃப் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலால் 26 பேர் உயிரிழந்தது இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கு இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளும் ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. இந்த செயலைக் கண்டிக்கும் விதமாகவும் பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்து வரும் பாகிஸ்தானைக் கண்டிக்கும் விதமாகவும் சிந்துநதி நீர் ஒப்பந்தம் ரத்து, சார்க் விசா ரத்து போன்ற நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது. இதன் காரணமாக பதற்றமான சூழல் நிலவில் வருகிறது. இதனிடையே பஹல்காம் தாக்குதல் தொடர்பாக சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்பட்டால் அதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷரீஃப் கூறியுள்ளார்.