தாதாவும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முக்தார் அன்சாரிக்கு ஆயுள் தண்டனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

போலி ஆவணங்கள் சமர்பித்து இரட்டை குழல் துப்பாக்கிக்கு உரிமம் பெற்ற வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், தாதாவுமான முக்தார் அன்சாரிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 1986 ஆம் ஆண்டு போலி ஆவணங்களை சமர்பித்து தாதா முக்தார் அன்சாரி இரட்டை குழல் துப்பாக்கியை வாங்கியதாக தகவல் வெளியான நிலையில், கடந்த 1990 ஆம் ஆண்டு, காசிபூர் காவல் நிலையத்தில் அன்சாரி மீது வழக்கு தொடர்ப்பட்டது. நீண்ட நாள்களாக இவ்வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், வாரணாசியில் உள்ள எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் நேற்று முக்தார் அன்சாரி குற்றவாளி என தீர்ப்பளித்தது. இந்நிலையில் இன்று அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. கிருஷ்ணானந்த ராய் கொல்லப்பட்ட வழக்கில் 10ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முக்தார் அன்சாரி, பாண்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Night
Day