தாமரை சின்னம் அனைத்து மக்களின் மனதிலும் வேரூன்றி உள்ளது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தாமரை சின்னம் மக்களின் மனதிலும் வேரூன்றி உள்ளதால் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியின் பாஜக வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி இருவரும் தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள அப்பா பைத்தியசுவாமி கோவிலில் தரிசனம் செய்தனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் புதுச்சேரி மக்களுக்கு சென்றடைந்துள்ளது என்றும் தாமரை சின்னம் மக்களின் மனதில் வேரூன்றியுள்ளதால் பாஜக வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி என்றும் தெரிவித்தார்.

Night
Day