திகார் சிறையில் உள்ள கெஜ்ரிவாலுக்கு உடல்நலம் பாதிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திகார் சிறையில் உள்ள அரவிந்த கெஜ்ரிவாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நான்கரை கிலோ உடல்எடை குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 21-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் நான்கரை கிலோ உடல் எடை குறைந்துள்ளதாகவும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கு மறுப்பு தெரிவித்த திகார் சிறை நிர்வாகம், அரவிந்த் கெஜ்ரிவால் கைதுசெய்தபோது 55 கிலோ எடையில் இருந்ததாகவும், தற்போதும் அதே எடையிலேயே இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

varient
Night
Day