திரிபுரா: சிங்கங்களுக்கு அக்பர், சீதா என பெயர் - முக்கிய அதிகாரி பணியிடை நீக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிங்கங்களுக்கு அக்பர், சீதா என பெயரிடப்பட்ட விவகாரத்தில் வனத்துறை முதன்மை பாதுகாப்பு அதிகாரியை திரிபுரா அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. திரிபுராவில் இருந்து மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி வனவிலங்கு பூங்காவுக்கு அனுப்பப்பட்ட இரு சிங்கங்களுக்கு அக்பர், சீதா என பெயரிடப்பட்டதால் பலத்த சர்ச்சை எழுந்தது. இதை எதிர்த்து விஸ்வ ஹிந்து பரிஷத் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிங்கங்களின் பெயர்களை மாற்ற, மேற்கு வங்க அரசுக்கு அறிவுறுத்தினார். அப்போது திரிபுராவில் சிங்கங்களுக்கு அக்பர், சீதா என பெயர் வைக்கப்பட்டதை நீதிபதி கண்டித்தார். இந்நிலையில் வனத்துறை முதன்மை பாதுகாப்பு அதிகாரி பிரபின் லால் அகர்வாலை திரிபுரா அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது.

Night
Day