திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியை கைப்பற்றும் முனைப்பில் பா.ஜ.க.

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வரும் நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவில் ஒரு தொகுதியையாவது கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடம் பா.ஜ.க. களமிறங்கி உள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு 2 லட்சத்து 90ஆயிரம் வாக்குகள் பெற்று 3வது இடத்தை பிடித்த நடிகர் சுரேஷ் கோபி மீண்டும் அங்கு களமிறங்குகிறார். இம்முறை ஆளும் இடது சாரி கட்சியிடம் இருந்து திருச்சூர் தொகுதியை கைப்பற்றி விடவேண்டும் என்ற முனைப்புடன் நடிகர் சுரேஷ் கோபி செயலாற்றி வருகிறார். ராஜ்யசபா உறுப்பினராக இருந்த போது திருச்சூர் பகுதிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து தனது செல்வாக்கை உயர்த்தியுள்ள சுரேஷ் கோபி இம்முறை திருச்சூர் தனது கைவசம் வரும் என தீவிரமாக களமிறங்கி உள்ளார். அதே போல் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் பலமான வேட்பாளரான சசி தரூருக்கு எதிராக நடிகை ஷோபனாவை நிறுத்த பா.ஜ.க. முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

Night
Day