இந்தியா
ஏப்.28ல் அவசரமாக கூடும் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை
பஹல்காம் தாக்குதலால் ஏற்பட்ட பதற்றமான சூழலில் அவசரமாக கூடுகிறது ஜம்மு கா...
நாடாளுமன்ற தேர்தலில் திருப்பதி தொகுதியை கைப்பற்ற தீவிர வியூகம் அமைத்து வரும் பாஜக, கூட்டணிக்கு தலைமை தாங்கும் தெலுங்கு தேசம் கட்சியிடம் திருப்பதி தொகுதியை கேட்டுப்பெற முடிவு செய்துள்ளது. ஆந்திர பா.ஜ.க நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தேசிய தலைவர்கள் நடத்திய ஆலோசனையில் திருப்பதி தொகுதியில் பா.ஜ.க. போட்டியிட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. திருப்பதி தொகுதி பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டால் அக்கட்சி சார்பில் மாநில பா.ஜ.க. தலைவர், முனி சுப்ரமணியம் அல்லது கர்நாடகா முன்னாள் தலைமை செயலாளர் ரத்தன பிரபாவின் மகளான நிகாரிகா போட்டியிடுவார் என தெரிகிறது. தெலுங்கு தேசத்திடம் பத்து நாடாளுமன்ற தொகுதிகளை பா.ஜ.க. கேட்ட நிலையில், ஐந்து நாடாளுமன்ற தொகுதிகளை மட்டுமே ஒதுக்க சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளதால் கூட்டணியில் இழுபறி நீடித்து வருகிறது.
பஹல்காம் தாக்குதலால் ஏற்பட்ட பதற்றமான சூழலில் அவசரமாக கூடுகிறது ஜம்மு கா...
தங்கள் அதிகார வரம்பிற்குள் தங்கியுள்ள அல்லது வசிக்கும் பாகிஸ்தான் நாட்ட?...