திருப்பதி லட்டு விலங்குகள் கொழுப்பு விவகாரம் - ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண்-நடிகர் பிரகாஷ் ராஜ் இடையே கருத்து மோதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பதி கோவில் லட்டு விவகாரத்தில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கும், நடிகர் பிரகாஷ் ராஜுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக பவன் கல்யாண் வெளியிட்ட எக்ஸ் பதிவில், கோவில்கள் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் ஆராய தேசிய அளவில் 'சனாதன தர்ம பாதுகாப்பு வாரியம்' அமைக்க வேண்டும் என்றும் 'சனாதன தர்மத்தை' இழிவுபடுத்துவதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனப் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்து பதிவிட்டுள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், நீங்கள் துணை முதலமைச்சராக இருக்கும் மாநிலத்தில் நடந்துள்ள சம்பவத்தில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுங்கள் என்றும் ஏன் தேசிய அளவில் இந்தப் பிரச்சினையை ஊதிப் பெரிதாக்குகிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் ஏற்கனவே போதுமான வகுப்புவாத பதற்றங்கள் உள்ளதாகவும் பிரகாஷ் ராஜ் குறிப்பிட்டுள்ளார்.

Night
Day