தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ராணுவ வீரர் வீர மரணம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில், உதம்பூர் மாவட்டம் துடு-பசந்த்கர் பகுதியில் ஜம்மு காஷ்மீர் காவல்துறையுடன் இணைந்து White Knight Corps  படை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அப்போது பயங்கரவாதிகளுடடன் நடந்த கடும் துப்பாக்கி சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் பலத்த காயமடைந்தாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக ஜம்முவை தளமாகக் கொண்ட White Knight Corps  தனது X தளத்தில் பதிவிட்டுள்ளது

Night
Day