தீ விபத்தில் இருந்து தப்பிக்க 2-வது மாடியில் இருந்து குதித்த குடியிருப்புவாசிகள்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் உள்ள நங்லோய் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து தப்பிக்க இரண்டாவது மாடியில் இருந்து குதித்த ஆறு பேர் படுகாயமடைந்தனர்.


ஜனதா மார்க்கெட் பகுதியில் உள்ள வீட்டின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. வீட்டில் இருந்த ஆறு பேர், தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இரண்டாவது மாடியில் இருந்து குதித்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தீயணைப்புத்துறையினர் சில மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

Night
Day