துபாயில் 18 ஆண்டுகள் சிறைவாசம் - விடுதலைக்கு உதவிய கே.டி. ராமராவ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

துபாயில் 18 ஆண்டு சிறைவாசத்துக்கு பின் விடுதலையான ஐந்து பேர், தெலங்கானாவில் வசிக்கும் தங்கள் குடும்பத்தாருடன் இணைந்தனர். நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் தெலங்கானாவை சேர்ந்த ஐவருக்கு துபாயில் கடந்த 2006ஆம் ஆண்டு, 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து ஐந்து பேரையும் விடுவிக்க உதவுமாறு அவர்களது குடும்பத்தினர் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவரான கே.டி. ராமராவிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கே.டி. ராமராவின் முயற்சியால் ஐவரையும் கருணை அடிப்படையில் துபாய் அரசு விடுவித்தது. விமானம் மூலம் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை வந்தடைந்த ஐவரையும் அவர்களது குடும்பத்தினர் கண்ணீர் மல்க வரவேற்றனர். குடும்பத்தினரை பார்த்ததும் ஐவரும் கண்ணீர் மல்க பி.ஆர்.எஸ். கட்சி தலைவரான கே.டி. ராமராவுக்கு நன்றி தெரிவித்தனர்.

Night
Day