தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக தாமதமாகும் - இந்திய வானிலை மையம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 6ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக சாத்திய கூறுகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆனால் மியான்மர் கடலோர பகுதியில் நிலவிய காற்றின் சுழற்சி காரணமாக, காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதில் தடை ஏற்பட்டது. இந்நிலையில், தென்மேற்கு வங்காள விரிகுடாவில் சூறாவளி சுழற்சி நீடித்து வருவதாகவும், இதன் தாக்கத்தால் அடுத்த 36 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 2 நாட்களில் மேற்கு திசையில் தமிழ்நாடு, இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் தமிழகத்தில் இன்று முதல் வரும் 15ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

varient
Night
Day