தெலங்கானாவில் இடிந்து விழுந்த சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 2வது உடல் கண்டுபிடிப்பு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெலங்கானாவில் இடிந்து விழுந்த சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 2வது உடலை கண்டுபிடித்துள்ள மீட்பு படையினர் அதை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 


நாகர்கர்னூல் பகுதியில் உள்ள ஸ்ரீசைலம் இடதுகரை தண்ணீர் கால்வாய் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி இடிந்து விழுந்த விபத்தில் உள்ளே 8 பேர் சிக்கிக் கொண்டனர். ராணுவம், பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்பு படையினர், போலீசார் உள்பட 700 பேர் இரவு, பகலாக போராடி வரும்நிலையில், 16 நாட்களுக்குப் பின்னர் கடந்த 9ம் தேதி குர்பிரீத சிங் என்ற தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டது. இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த மேலும் ஒருவரின் உடல் இன்று அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டதாகவும், சிக்கலான இடத்தில் உள்ள அந்த உடலை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.  

Night
Day