தெலங்கானா : வெப் சீரியஸை பார்த்து கள்ள நோட்டு தயாரிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெலங்கானாவில் வெப் சீரிஸை பார்த்து கள்ள நோட்டு தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஹைதராபாத்தில் லட்சுமி நாராயணன் என்பவர், பார்சி என்ற வெப்சீரிஸ் மூலம் ஈர்க்கப்பட்டு போலி நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பிரிண்டர், கிரீன் ஃபாயில் பேப்பர் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி கள்ள நோட்டுகளை தயாரித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் இவரது நண்பர் பிரனாய் 3 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை கண்டுபிடித்த அல்லாப்பூர் காவல்நிலைய போலீசார், லட்சுமிநாரயணன், பிரனாய் ஆகிய இருவரையும் கைது செய்து, 4 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள், பிரிண்டர் உள்ளிட்டற்றையும் பறிமுதல் செய்தனர். 

Night
Day