தேசிய கீதம் இசைத்த போது சிரித்து பேசிய முதல்வர் நிதிஷ் குமார்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பீகாரில் நிகழ்ச்சி ஒன்றில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது முதலமைச்சர் நிதிஷ் குமார் சிரித்தும், பேசியபடி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

பாட்னாவில் உள்ள பாடலிபுத்ரா விளையாட்டு வளாகத்தில் நேற்று நடந்த செபக்தக்ரா உலகக்கோப்பை தொடக்க விழாவில், தேசியகீதம் இசைக்கப்பட்டது. அப்போது மேடையில் தனக்கு அருகில் நின்ற முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் தீபக் குமாருடன், நிதிஷ் குமார் சிரித்து பேசியதோடு, எதிரே இருந்தவர்களுக்கு வணக்கம் வைத்துக் கொண்டிருந்தார். முன்னதாக, தேசிய கீதம் இசைப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டபோது மேடையில் இருந்து இறங்கி விழாவில் பங்கேற்றவர்களுடன் நிதிஷ் குமார் கைகுலுக்கிக் கொண்டிருந்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் மூலம் நிதிஷ்குமார் நாட்டை அவமதித்துவிட்டதாக ராஷ்டிரிய ஜதா தளம் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. 

Night
Day