தேர்தல் ஆணையத்திடம் பலமுறை விளக்கியும் ஏற்க மறுக்கிறது - ராஜீவ் சுக்லா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது என்பது குறித்து பலமுறை விளக்கிக் காண்பித்தும் தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்து விட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 


இதுதொடர்பாக டெல்லியில் பேட்டியளித்த அக்கட்சியின் எம்பி ராஜீவ் சுக்லா, தேர்தல் ஆணையத்திடம் பலமுறை காங்கிரஸ் சார்பில் டெமோ செய்யப்பட்டதாகவும், ஆனால் அதை ஏற்க தேர்தல் ஆணையம்  தயாராக இல்லை என்றும் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக சந்திக்கும் குழுவினருடன், தேர்தல் ஆணையத்தில் இருப்பவர்கள் சண்டையிட்டு வாக்குவாதம் செய்வதாக கூறிய ராஜீவ் சுக்லா, தங்களது விளக்கத்தை தேர்தல் ஆணையம் ஏற்க தயாராக இல்லை என்பதுதான் இந்த விவகாரத்தில் முக்கிய பிரச்னை என்றும் தெரிவித்தார்.

Night
Day