தேர்தல் நேரத்தில் பிரச்னைகளை உருவாக்கவே சிஏஏ அமல் - காங்கிரஸ் புகார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டமானது மக்களவைத் தேர்தல் நேரத்தில் பிரச்சினைகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அக்கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், 2019 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான விதிகளை மோடி அரசு அறிவிக்க நான்கு ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள் ஆகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது மக்களவைத் தேர்தலின் போது பிரச்சினைகளை உருவாக்கவும், குறிப்பாக மேற்கு வங்கம் மற்றும் அசாமில் பெரும் பிரச்சினைகளை உருவாக்கும் என்பதற்காகாவே பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் திட்டமிட்டு இதனை அமல்படுத்தியுள்ளதாகவும் சாடியுள்ளார்.

Night
Day