தேர்தல் பத்திர முறைகேடு - மத்திய அரசின் பணப்பறிப்பு திட்டம் : ஜெய்ராம் ரமேஷ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேர்தல் பத்திர முறைகேடு மத்திய அரசின் பணப்பறிப்பு திட்டம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

இது பற்றி அவர் தனது எக்‍ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தேர்தல் பத்திர ஊழலின் உண்மையான ஆழம் குறித்து ஒவ்வொரு நாளும் பல்வேறு எடுத்துக்காட்டுகள் வெளி வருவதாக கூறியுள்ளார். வருமானவரித்துறை , அமலாக்‍கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிறுவனங்கள் பல கோடி ரூபாய்க்‍கு தேர்தல் பத்திரங்களை வாங்கி பாஜகவுக்‍கு அளித்துள்ளதாக உதாரணங்களுடன் விளக்‍கியுள்ளார் . கடந்த ஆண்டு நவம்பரில் ரெட்டி லேப்பில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாகவும், இதை அடுத்து அந்த நிறுவனமானது 31 கோடி ரூபாய்க்‍கு தேர்தல் பத்திரத்தை வாங்கியுள்ளது என்றும், வெளிப்படை தன்மை இல்லாத பி.எம்.கேர்ஸ் திட்டம் என்று  ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார். 

Night
Day