தேர்தல் முடியும் வரை ரூ.1,700 கோடி வசூலிக்கப்படாது - வருமான வரித்துறை வாக்குறுதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவை தேர்தல் முடியும் வரை காங்கிரசிடம் இருந்து வரிபாக்கியை வசூலிக்க கட்டாய நடவடிக்கை எடுக்க மாட்டோம் என உச்சநீதிமன்றத்தில் வருமான வரித்துறை உத்தரவாதம் அளித்துள்ளது.

2017-18 முதல் 2020-21 ஆம் ஆண்டுக்‍கான வருமான வரி பாக்‍கி தொகையான 3 ஆயிரத்து 500 கோடி​ரூபாயை செலுத்துமாறு வருமான வரித்துறை காங்கிரசுக்‍கு நோட்டீஸ் அனுப்பியது. இதனை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்‍கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்‍கு வந்தது. அப்போது மக்களவை தேர்தல் நேரத்தில் காங்கிரசுக்கு தொல்லை கொடுக்க மாட்டோம் என்றும் தேர்தலின் போது எந்த கட்சிக்கும் பிரச்னையை ஏற்படுத்த விரும்பவில்லை என்றும் வருமான வரித்துறை உறுதி அளித்தது. இதனையடுத்து வழக்கின் விசாரணையை ஜூலை மாதத்துக்‍கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

Night
Day