தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டதால் ஆயுள் தண்டனை - ரூ.1 கோடி அபராதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரப்பிரதேசத்தில் மாநில அரசு நடத்தும் போட்டி தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க புதிய அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வினாத்தாள் கசிவு தொடர்பாக கைது செய்யப்படுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் முதல் ஆயுள் சிறை தண்டனையும், மேலும் 1 கோடி ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற காவலர் தேர்வு உள்ளிட்ட தேர்வுகளில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து இந்த புதிய சட்டத்தை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது.

Night
Day