தொகுதி மறுவரையறை மூலம் தென்னிந்திய மாநிலங்களில் தொகுதிகளை குறைப்பது சரியல்ல - டிகே சிவக்குமார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தொகுதி மறுவரையரை மூலம் தென்னிந்தியாவின் எந்த மாநிலத்திலும் தொகுதிகளை குறைப்பது சரியல்ல என்று கர்நாடக துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் கூறியுள்ளார். மங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொகுதி மறுவரையையை காங்கிரஸ் கட்சி எதிர்ப்பதாக கூறினார். தென் மாநிலங்களில் மக்களவை தொகுதிகளை குறைக்க மத்திய அரசு விரும்புவதாகக் கூறிய அவர், மத்திய அரசின் நடவடிக்கைகள் மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை என்று தெரிவித்தார். மக்களுக்காக நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக போராடுவோம் என்றும் தென்னிந்தியாவில் எந்த மாநிலத்தின் தொகுதிகளையும் குறைப்பது சரியல்ல என்றும் டிகே சிவக்குமார் கூறினார். 

Night
Day