தொடர் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு - மாநிலங்களவை ஆளும் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஜெகதீப் தன்கர் சந்திப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மாநிலங்களவை ஒத்திவைப்பை தொடர்ந்து மாநிலங்களவை ஆளும் கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இருவரையும் அவைத் தலைவர் ஜெகதீப் தங்கர் நேரில் அழைத்துப் பேசினார். 

கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே சிவகுமார் அரசியலமைப்பு மாற்றப்படும் என பேசிய விவகாரத்தால் மாநிலங்களவையில் இன்று கடும் அமளி ஏற்பட்டு அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. மாநிலங்களவையில் பாஜக மாநிலங்களவை தலைவர் ஜேபி நட்டா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இடையே அவையில் கடும் வார்த்தை போர் நிலவியது. இதனையடுத்து ஏற்பட்ட தொடர் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்தசூழலில், இருவரையும் அவைத் தலைவர் ஜெகதீப் தங்கர் தனது அறைக்கு அழைத்துப் பேசினார். அவை நடவடிக்கையை சுமூகமாகக் கொண்டு செல்வது மற்றும் அவையின் கண்ணியத்தை சீர்குலைக்காத வகையில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்களின் ஒத்துழைப்பு தேவை உள்ளிட்டவை குறித்து அப்போது ஜெகதீப் தன்கர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. 

Night
Day