தொலை தொடர்புத்துறையில் 5 ஜி சேவைக்‍கான அலைக்‍கற்றை ஏலம் தொடங்கியது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தொலை தொடர்புத்துறையில் 5 ஜி சேவைக்‍கான அலைக்‍கற்றை ஏலம் நேற்று தொடங்கியது.
இந்த ஏலத்துக்கான அறிவிப்பை கடந்த மார்ச் 8-ந்தேதி தொலைத்தொடர்பு துறை வெளியிட்டு இருந்தது. அதன்படி 96 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 10 ஆ​யிரத்து 500 மெகா ஹெர்ட்ஸ் அலைபேசி சேவைகளுக்கான அலைக்கற்றை ஏலம் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஏலத்தின் முதல் நாளான நேற்று டெலிகாம் ஆபரேட்டர்கள் சுமார் 11 ​ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளனர். 5 சுற்று ஏலம் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. 5ஜி அலைக்‍கற்றைக்‍கான ஏலங்கள் நாடு முழுவதும் 5ஜி சேவைகளை விரைவாக வெளியிடுவதற்கு ஊக்கமளிக்கும் என்று இந்திய செல்லுலார் ஆபரேட்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா டைரக்டர் ஜெனரல் எஸ்.பி.கோச்சார் தெரிவித்துள்ளார்.

varient
Night
Day