நக்சல் பாதிப்பு மாவட்டங்களின் எண்ணிக்கை 58 ஆக குறைவு - மத்திய உள்துறை அமைச்சகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியாவில் நக்சல் பாதிப்பு மாவட்டங்களின் எண்ணிக்கை 58 ஆக குறைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அனைத்து மாநில தலைமைசெயலர்கள், டிஜிபிக்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் நக்சல் பாதிப்பை கண்காணிக்கும் பிரிவு அனுப்பியுள்ள அறிக்கையில் இந்த விவரங்கள் வெளியாகி உள்ளது. நக்சல் பாதிப்பு மாவட்டங்களுக்கான பாதுகாப்பு தொடர்பான செலவின திட்டத்தை உள்துறை அமைச்சகம் 2021-ம் ஆண்டு ஆய்வு செய்தபோது, நாட்டில் 10 மாநிலங்களில் 72 மாவட்டங்களில் நக்சல் பாதிப்பு இருந்ததாகவும், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த எண்ணிக்கை 58 ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Night
Day