நடிகை ஜெயபிரதாவை மார்ச் 6-ஆம் தேதிக்‍குள் கைது செய்ய உ.பி. நீதிமன்றம் உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இரு வேறு வழக்குகளில் முன்னாள் எம்.பி.யும் பிரபல நடிகையுமான ஜெயபிரதா, கீழமை நீதிமன்றத்தால் காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்‍கப்பட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை ஜெயபிரதா, உத்தரப்பிரதேச மாநில சமாஜ்வாதி கட்சியில் இணைந்து ராம்பூர் மக்‍களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்‍கப்பட்டார். 2019 பொதுத் தேர்தலுக்கு முன்பு பாஜகவில் இணைந்த அவர் நடத்தை விதிகளை மீறியதாக காவல்துறையினரால் வழக்‍கு தொடரப்பட்டு ராம்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தும் ஜெயபிரதா ஆஜராகவில்லை. இதே போன்று தனது திரையரங்கத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்‍கான இ.எஸ்,ஐ தொகையை அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தாததால் ஜெயபிரதாவுக்‍கு எழும்பூர் நீதிமன்றம் 6 மாத கால சிறை தண்டனை விதித்தது. இதிலும் அவர் நீதிமன்ற உத்தரவை மதிக்காத நிலையில் அவரை மார்ச் 6 ஆம் தேதிக்‍குள் கைது செய்து ஆஜர்படுத்துமாறு ராம்பூர் கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Night
Day