நவீன் பட்நாயக்குடன் பொது இடங்களில் தோன்றுவதை தவிர்த்தார் வி.கே.பாண்டியன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஒடிசாவில் தொடர்ந்து 5 முறை வென்று 24 ஆண்டுகள் முதல்வராக இருந்த பிஜூ ஜனதாதளம் தலைவர் நவீன்பட்நாயக் இந்த தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே. பாண்டியன் தான் காரணம் என பாஜகவினர் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். ஒடிசா பிரசாரத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் ஒடிசாவை தமிழர் ஒருவர் ஆளவேண்டுமா என்று கேள்வி எழுப்பினர். மேலும் நவீன் பட்நாயக் பேசும் போது அவரது சேரில் கால் வைப்பது, நவீன் பேசும் போது அவரது கை நடுங்குவதை வி.கே. பாண்டியன் மறைப்பது தொடர்பான 2 வீடியோக்களை பா.ஜ.கவினர் வெளியிட்டு விமர்சித்து வருகின்றனர். 

Night
Day