நவோதயா பள்ளி மைதானத்தில் சரமாரியாக கொட்டிய தேனீக்‍கள்... காயமடைந்த 8 மாணவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதி...

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள மத்திய அரசின் நவோதயா பள்ளியில் தேனீக்‍கள் கொட்டியதில் காயமடைந்த 8 மாணவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டனர். 

காரைக்கால் அடுத்த ராயன்பாளையம் பகுதியில் உள்ள மத்திய அரசின் நவோதயா பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் பராமரிப்பு பணிக்காக ஜே.சி.பி எந்திரம் கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. அப்போது அங்கு தேனீக்‍கள் கொட்டியதில் மைதானத்தில் விளையாடிக்‍கொண்டிருந்த 8 மாணவர்கள் காயமடைந்தனர். உடனடியாக அந்த மாணவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் பின்னர்  மேல் சிகிச்சைக்காக காரைக்கால் அரசு பொது மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Night
Day