நாக்பூரில் போட்டியிடுகிறார் - நிதின் கட்கரி வடக்கு மும்பையில் - பியூஷ் கோயல் போட்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 72 பேர் அடங்கிய இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. 

மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில்
பாஜக சார்பில் போட்டியிடு ம் 195 பேர் அடங்கிய முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி கடந்த 2-ம் தேதி அறிவித்தது. இதில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. 

இந்நிலையில் பாஜக சார்பில் போட்டியிடும் 72 பேர் அடங்கிய இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் டெல்லி, இமாச்சல பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட 11 மாநிலங்களில் இருந்து பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 

அதன்படி மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் நாடாளுமன்ற தொகுதியிலும், இமாச்சல பிரதேசம் ஹமிர்பூர் தொகுதியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கர்நாடகாவை பொறுத்தமட்டில் 20 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை ஹாவேரி தொகுதியில் போட்டியிடுகிறார். பெங்களூர் தெற்கு தொகுதியில் மீண்டும் தேஜஸ்வி சூர்யா போட்டியிடுகிறார்.

மத்திய பிரதேசம் பீட் தொகுதியில் பங்கஜா முண்டே, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மும்பை வடக்கு தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

Night
Day