நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்று பதவி நீக்‍கப்பட்ட மஹுவா மொய்த்ரா - சி.பி.ஐ. விசாரணை நடத்தி 6 மாதங்களுக்‍குள் அறிக்‍கை தாக்‍கல் செய்ய லோக்‍பால் உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்ற விவகாரத்தில் பதவி நீக்‍கம் செய்யப்பட்ட திரிணமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மஹுவா மொய்த்ராவிடம் விசாரணை நடத்தி 6 மாதங்களுக்‍குள் அறிக்‍கை தாக்‍கல் செய்ய வேண்டும் என சிபிஐக்‍கு ஊழல் தடுப்பு அமைப்பான லோக்‍பால் உத்தரவிட்டது.

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப தொழிலதிபர் ஹீரா நந்தானி என்பவரிடம் மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றதாக பாஜக எம்.பி.​ நிஷிகாந்த் துபே குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு நடத்திய விசாரணையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு குழு பரிந்துரையின்பேரில் மக்‍களவை மஹுவா மொய்த்ராவை பதவி நீக்‍கம் செய்தது. இந்தக்‍ குற்றச்சாட்டு தொடர்பாக மஹுவா மொய்த்ராவிடம் விசாரணை நடத்தி 6 மாதங்களுக்‍குள் சிபிஐ விசாரணை அறிக்‍கை சமர்ப்பிக்‍க வேண்டும் என நீதிபதி அபிலாஷா குமார் தலைமையிலான லோக்பால் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

varient
Night
Day