நாடாளுமன்றத்தை அதிகம் முடக்கியது பாஜக தான்" - மல்லிகார்ஜுன கார்கே

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

எதிர்க்கட்சியாக நாடாளுமன்றத்தை அதிகம் முடக்கி ஜனநாயகத்தை அச்சுறுத்தியது பாஜகதான் என காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். 

இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடா் தொடங்கப்படுவதற்கு முன் செய்தியாளா்களிடம் பேசிய பிரதமா் நரேந்திர மோடி, 'நாடாளுமன்றத்தில் சலசலப்பை உருவாக்கி, அவை நடவடிக்கைகளைச் சீா்குலைத்து, ஜனநாயகத்தை எதிர்க்கட்சிகள் சிதைப்பதாக குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மல்லிகார்ஜுன கார்கே, கடந்த 20 ஆண்டு தரவுகளின்படி, நாடாளுமன்ற முடக்கங்கள் அதிகமாக நடந்தது பாஜக பிரதான எதிா்க்கட்சியாக இருந்த 2009-2014 இடையிலான 15-வது மக்களவையில்தான் எனக் கூறியுள்ளார்.  

Night
Day