நாடாளுமன்றம் நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர் புகை குண்டு வீச்சு - விவசாயிகள் விரட்டியடிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்ற பஞ்சாப் விவசாயிகளை, மாநில எல்லையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். தடுப்புகளை தகர்த்து முன்னேறிய விவசாயிகள் கண்ணீர் புகை குண்டுகள் வீசி விரட்டியடிக்கப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. 

வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்திரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி சலோ போராட்டத்தை பஞ்சாப் விவசாயிகள் தொடங்கியுள்ளனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் நடைப்பயணமாக நாடாளுமன்றம் நோக்கி இன்று புறப்பட்டனர். 

அவர்களைத் தடுத்து நிறுத்தும் விதமாக பஞ்சாப் - ஹரியானா மாநில எல்லையில் உள்ள ஷம்பு பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு ஏராளமானே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக புறப்பட்ட விவசாயிகள் ஷம்பு பகுதியில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதைக் கண்டித்து விவசாயிகள் முழக்கங்கள் எழுப்பியதால் அந்த பகுதியில் பரபரப்பி நிலவியது.

எனினும், போலீசாரின் தடுப்புகளை ஏறி குதித்து விவசாயிகள் முன்னேற முயன்றனர். சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த கம்பி வலை தடுப்புகளை அகற்றி விவசாயிகள் பேரணியை தொடர முயன்றனர். அப்போது, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி விவசாயிகளை விரட்டியடித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.


Night
Day