நாடாளுமன்ற இரு அவைகளும் 2வது நாளாக முடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அதானி மற்றும் மணிப்பூர் விவகாரங்களை விவாதிக்க கோரி எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற இரு அவைகளும் 2வது நாளாக இன்றும் முடங்கின. 

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர் கடந்த 25ம் தேதி துவங்கியது. இரு அவைகளும் கூடியதும் அதானி மற்றும் மணிப்பூர் விவகாரங்கள் குறித்து விவாதிக்க எதிர் கட்சி எம்பிக்கள் வலியுறுத்தினர். ,இதனால் ஏற்பட்ட அமளி காரணமாக முதல் நாளே இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன. நேற்று அரசியல் சாசன அமைப்பு நாள் என்பதால் நாடாளுமன்றத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடிய நிலையில், மக்களவையில் அதானி மற்றும் மணிப்பூர் விவகாரங்களை எழுப்பி எதிர் கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் முதலில் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட மக்களவை பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல், மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியும், அதானி விவகாரம் குறித்து விவாதம் நடத்தவும் மாநிலங்களையிலும் எதிர்க் கட்சிகள் வலியுறுத்தின. இதனால் ஏற்பட்ட அமளி காரணமாக மாநிலங்களவை  நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

Night
Day