நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மன்மோகன் சிங் ஒரு எடுத்துக்காட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் முன்னுதாரணமாக விளங்கியவர் மன்மோகன் சிங் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். மாநிலங்களவையில் பதவிக்காலம் நிறைவடைய உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி உரையாற்றினார். அதில், மாநிலங்களவையில் உள்ள மூத்த எம்பிக்கள் தற்போதைய எம்பிக்களுக்கு கலங்கரை விளக்கம் போல உள்ளனர் என்று தெரிவித்தார். மேலும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மூத்த உறுப்பினரான மன்மோகன் சிங் ஒரு எடுத்துக்காட்டு என அவருக்கு புகழாரம் சூட்டினார். சக்கர நாற்காலியில் அமர்ந்தும் இறுதிவரை நாடாளுமன்றத்திற்கு தவறாமல் வந்தவர் மன்மோகன் சிங் என்றும், நாடாளுமன்ற வரலாற்றில் பாராட்டத்தக்க வகையில் மூத்த உறுப்பினர் மன்மோகன் சிங் பணிகள் இருந்ததாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். 

Night
Day