இந்தியா
மீண்டும் ஆட்சியை தக்க வைக்குமா ஹேமந்த் சோரன் அரசு
ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், தே?...
உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி - காங்கிரஸ் கூட்டணியில் நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் போட்டியிடுவதாக தெரியவந்துள்ளது. தொகுதி ஒதுக்கீட்டில் இழுபறி ஏற்பட்ட நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரான பிரியங்கா காந்தி, நேரடியாக பேசியதை அடுத்து தொகுதி பங்கீட்டில் சுமூக முடிவு ஏற்பட்டுள்ளது. அதன்படி மொராதாபாத் தொகுதியை சமாஜ்வாதி கட்சிக்கு விட்டுத்தர காங்கிரஸ் ஒப்புக்கொண்டதாகவும், அதற்கு பதிலாக சீதாப்பூர், ஸ்ராவாஸ்தி அல்லது வாரணாசி ஆகிய தொகுதிகளில் ஒன்றை கேட்டதாகவும் தெரிகிறது. இறுதியாக கிடைத்த தகவலின் படி காங்கிரஸ் கட்சி, அமேதி, ரேபரேலி, பிரயாக்ராஜ், வாரணாசி, மஹராஜ்கஞ்ச், தியோரியா, பன்ஸ்கோன், சீதாப்பூர், அம்ரோஹா, புலந்த்சாஹர், காசியாபாத், கான்பூர், ஜான்சி, பாரபங்கி, பதேபூர் சிக்ரி, சஹரன்பூர் மற்றும் மதுரா ஆகிய 17 தொகுதிகளில் போட்டியிடும் என தெரிகிறது.
ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், தே?...
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் மகா விகாஸ் அகாதி 160 முதல் 165 இடங்களை கைப்?...