நாடாளுமன்ற தேர்தல் - கூகுளுடன் கைகோர்த்த இந்திய தேர்தல் ஆணையம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்ற தேர்தல் குறித்த தவறான தகவல் பரவுவதை தடுக்கவும், அங்கீகரிக்கப்பட்ட தகவல்களை மக்களிடம் கொண்டு செல்லவும், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட தகவல்களை அடையாளப்படுத்தவும் இந்திய தேர்தல் ஆணையத்துடன் கூகுள் நிறுவனம் கைகோர்த்துள்ளது. 

இதுதொடர்பாக கூகுள் இந்தியா நிறுவனம் அதன் வலைப்பதிவில், கூகுள் தேடுபொறி தளத்தில் வாக்காளர் அடையாள அட்டைக்கு எவ்வாறு பதிவு செய்வது, எப்படி வாக்களிப்பது போன்ற தேர்தல் தொடர்பான முக்கிய தவல்களை ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் மக்கள் எளிதாக கண்டறிவதற்காக இந்திய தேர்தல் ஆணையத்துடன் தாங்கள் இணைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களை தவறாக வழிநடத்துவதை தடுக்க டீப்பேக் மற்றும் எடிட் செய்யப்பட்ட கன்டென்ட்களுக்கு தங்களது விளம்பர கொள்கையில் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.  

Night
Day