நாடு முழுவதும் "இன்று" நீட் தேர்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

2024 - 25ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நடைபெறுகிறது. 

தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வை சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். நீட் தேர்வுகள் நாளை பிற்பகல் 2 மணி முதல் மாலை ஐந்து 20 மணி வரை மொத்தம் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெறவுள்ளது. இந்த தோ்வுக்கான முடிவுகள் ஜூன் மாதம் 14-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உட்பட 13 மொழிகளில் நடைபெறும் இந்த நீட் நுழைவுத் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தேர்வு எழுத வரும் மாணவர்கள் முழு கை சட்டை அணிய அனுமதி கிடையாது எனவும், லேசான அரைக்கை சட்டை அல்லது டீசர்ட் மட்டுமே அணியவேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Night
Day