நாடு முழுவதும் களைகட்டும் ஹோலி பண்டிகை கொண்டாட்டம்..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வண்ணப் பொடிகைளை தூவியும், ஒருவருக்கொருவர் முகத்தில் பூசியும் மக்கள் ஹோலிப் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

ஹோலி பண்டிகைக்கு முதல் நாளில் மகா விஷ்ணுவின் பக்தனான பிரகலாதனை கொல்லும் முயற்சியில் அசுர குலத்தை சேர்ந்த ஹோலிகா நெருப்பில் எரிந்து மாண்டுபோனதை குறிக்கும் வகையில் ஹோலிகா தகனம் நிகழ்ச்சி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து ஹோலி பண்டிகை கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் இன்று களைகட்டியுள்ளது. 


உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் ஸ்ரீ கிருஷ்ணா ஜன்மாஸ்தான் கோவில் அருகே ஹோலி கொண்டாட்டத்தில் ஏராளமானோர் ஈடுபட்டனர். ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவியும் நடனமாடியும் வண்ணங்களின் திருவிழாவை மக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அங்கு திரண்ட மக்கள் வண்ணப் பொடிகளை தூவியும் நடனமாடியும் ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.


Night
Day