நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கியது - 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வெழுதுகின்றனர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடு முழுவதும் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. தீவிர சோதனைக்குப்பின்னரே மாணவ, மாணவிகள், தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

எம்.பி.பி.எஸ், பி,டி,எஸ்  மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் தேசிய முகமை நீட் நுழைவுத் தேர்வை நடத்துகிறது. அந்த வகையில், இந்த ஆண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் 557 நகரங்களில் இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வை நாடு முழுவதும்  24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். தமிழகத்தில் மட்டும் 12 ஆயிரத்து 730 அரசு பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள சின்மயா வித்தியாலயா பள்ளி மையத்தில் ஏராளமான மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். முன்னதாக தேர்வு மையத்திற்கு வந்த மாணவர்கள், தீவிர பரிசோதனைக்குப் பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

Night
Day